Saturday, April 14, 2018

சிரியா மீது தாக்குதல்: ரஷ்யா எச்சரிக்கை!

வாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் நடத்தவது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் நடத்தவது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேதம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்
ள கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதனையடுத்து சிரியாவை அடக்கி வைக்க அந்நாடு மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், லெபனான் எல்லையில் உள்ள சிரிய விமானப்படை தளம் சேதமடைந்தது.
உரிமையில்லை
தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அன்டலி அன்டோனோவ் கூறுகையில், சிரியா மீதான அமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதலுக்கு நிச்சயம் எதிர்விளைவுகள் இருக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இதற்கான பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டும். ரஷ்ய அதிபர் புதினை அவமதிப்பதை ஏற்று கொள்ள முடியாது. மிகப்பெரிய ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கும், அமெரிக்கா மற்ற நாடுகளை குறை சொல்வதற்கு உரிமையில்லை என்றார்.

ரஷ்ய வெளியுறவு விவகார குழு துணைத்தலைவர் ஜபாரோவ் கூறுகையில், தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துவோம். தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த தாக்குதல் சர்வதேச விதிகளை மீறிய செயல் எனக்கூறினார்.
அவசியம்
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் டுவிட்டரில் கூறுகையில், கடந்த ஏப்ரல் 7 ல் ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் பொறுமைக்கான எல்லையை தாண்டிவிட்டது. இதனால் பிரான்ஸ் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய அவசியமாகிவிட்டதாக கூறியுள்ளார்.
முயற்சி தோல்வி
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறுகையில், ரசாயன ஆயுதங்கள் சிரிய அதிபர் ஆசாத், பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம் ஆனால், எங்களின் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொன்றும், தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ராணுவத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.
ஆதரவு ஏன்
 
கனடா பிரதமர் ஜஸ்டின் திரிதேயு கூறுகையில், சிரிய அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கு கனடா கண்டனம் தெரிவிக்கிறது. தனது சொந்த மக்கள் மீது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்திய சிரிய அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க அமெரிக்கா, இங்கிலாந்துபிரான்ஸ் தாக்குதலுக்கு கனடா ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment